மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
956 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
956 days ago
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்ட நாள் கனவான டைரக்ஷன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பாரோஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் ‛பாரோஸ்' என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் நடத்திவரும் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்கிற பதினாறு வயது சிறுவனை இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்கிறார் மோகன்லால்.
இந்தநிலையில் ஐ இன் தி ஸ்கை, ஸ்கை டீப் ப்ளூ சீ-3, பிட்ஸ் பர்பெக்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசை அமைப்பாளர் மார்க் கிலியன் தற்போது இந்த படத்தில் இணைத்துள்ளார். இது குறித்த தகவலை தற்போது மோகன்லாலே வெளியிட்டுள்ளார். ஏற்கனவே லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கும் நிலையில் அவர் பாடல்களுக்கு இசையமைப்பாளர் என்றும், தற்போது இணைந்துள்ள மார்க் கிலியன் இந்த படத்தில் பின்னணி இசைக்காக பொறுப்பேற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
956 days ago
956 days ago