உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்…

'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்…


2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த, அதிக லாபத்தைக் கொடுத்த சிறிய பட்ஜெட் படங்களில் ஒன்று 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அபிஷன், உடனே தனது அடுத்த படத்தை இயக்கவில்லை. அதற்குப் பதிலாக நடிகராக முடிவு செய்தார். அவர் நாயகனாக அறிமுகமான 'வித் லவ்' படம் கடந்த வாரம் வெளியானது. படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு நடிகராக விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் அபிஷன்.

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் நாயகனாக சசிகுமார் நடித்து அதன்பின் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் அவர் நாயகனாக நடித்துள்ள 'மை லார்ட்' படம் வெளியாக உள்ளது. போன வருடம் பெற்ற வெற்றியைப் போலவே இந்த வருடமும் அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போன வாரம் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர், ஒரு நடிகராக அறிமுகமாகி வெற்றி பெற்றுவிட்டார். இந்த வாரம் அப்படத்தின் நாயகன் சசிகுமார் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்வாரா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !