உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர்

ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர்

விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் 'ஹி இஸ் பிரெக்னன்ட்'. மூவி ஸ்க்ரோல் சார்பில் சோமு தேவ் தயாரித்துள்ளார். ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ளார். ரஞ்சனா கதாநாயகியாக நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.

இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம். கதையை காமெடியாக உருவாக்காமல் கொஞ்சம் சீரியஸாக உருவாக்கினோம்.

கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர மற்றபடி இது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை தான். கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான் இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்.

இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்றார். வருகிற 14ம் தேதி காதலர் தினத்தன்று மூவி ஸ்க்ரோல் என்ற தளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !