நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது தனது 25-வது படமான ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.