மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
919 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
919 days ago
ஐதராபாத் : 'எனக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது நலமாக இருக்கிறேன்' என, பிரபல நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
1994ல் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் பெற்றவர் பிரபல ஹிந்தி நடிகையான சுஷ்மிதா சென். தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். பல்வேறு 'டிவி' நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துள்ளார். தற்போது, தெலுங்கானாவின் ஐதராபாத்தில் வசித்து வரும் சுஷ்மிதாவுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில், தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சுஷ்மிதா கூறியுள்ளதாவது: உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், பலமாகவும் வைத்திருங்கள். உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும். இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.
இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' செய்யப்பட்டு, 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது என்பதை என் இதய நோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சரியான நேரத்தில் உதவியதுடன், ஆக்கப்பூர்வமான உதவிகள் வழங்கியவர்களுக்கு மற்றொரு பதிவில் நன்றி தெரிவிப்பேன். எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் என் வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
919 days ago
919 days ago