ஒப்பீடு வேண்டாம் - ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 952 days ago
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் படங்களில் நடிக்கிறார். அதேசமயம் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படங்கள் ஹிந்தி சேனல்களில் கொண்டாடப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் இந்திய சினிமாவின் ஒருபகுதியே. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதால் அதுபற்றி விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் நல்ல கதை, கலைஞர்கள், படைப்பாளிகள் உள்ளனர். இதன்மூலம் சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும்'' என்கிறார்.