உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு படத்தின் இசை விழாவில் சூர்யா

சிம்பு படத்தின் இசை விழாவில் சூர்யா

சிம்பு நடித்திருக்கும் பத்து தல படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் புரமோஷன் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகிறது. பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறதாம். இந்த விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சிம்பு. அதேபோன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்து தல படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவே, சூர்யாவின் 42 வது படத்தையும் தற்போது தயாரித்து வருவதால் சிம்பு படத்தின் இசை விழாவில் கலந்து கொள்வதற்கு சூர்யா இசைவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !