பாலிவுட் பெருமையை மீட்ட 'பதான், ஷாருக்கான்'
ADDED : 946 days ago
இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. 'பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிவந்த பின்பு தென்னிந்தியத் திரைப்படங்களும் இந்தியப் படங்கள் என்ற பெயரை உலக அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்தன.
ஹிந்திப் படங்கள் செய்யாத வசூல் சாதனையை இந்திய அளவில் 'பாகுபலி 2' படம் செய்தது. அந்தப் படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 510 கோடியை வசூலித்திருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை 'பதான்' படம் தற்போது முறியடித்துள்ளது.
பாலிவுட்டின் இழந்த பெருமையை 'பதான்' படமும் ஷாருக்கானும் மீட்டுவிட்டதாக ஹிந்தித் திரையுலகினர் மகிழ்ந்துள்ளனர். அதே சமயம் ஷாருக்கானைப் போல மற்ற ஹீரோக்களின் படங்களும் தென்னிந்தியப் படங்களை மீறி வசூலிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.