ராம் சரண் - ஷங்கர் படத்தின் தலைப்பு இதுவா?
ADDED : 945 days ago
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 15வது படத்தை நடித்து வருகிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை வரும் மார்ச் 27ம் தேதி ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‛சி.இ.ஓ' என்ற டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.