ராகவா லாரன்ஸ் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்
ADDED : 1024 days ago
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. தற்போது சந்திரமுகி 2 பாகத்தில் இவர் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜிகிர்தண்டா 2, அதிகாரம் போன்ற படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் இயக்குகிறாராம். ஹாரர் காமெடி கதை களத்தில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.