லால் சலாம் படத்தில் செல்வராகவன்
ADDED : 986 days ago
சாணிக் காயிதம் , பீஸ்ட் , பகாசுரன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செல்வராகவன். அதோடு, ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்திலும் செல்வராகவன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்பந்தமாக செல்வராகவனை சந்தித்து கதை சொல்லி கால்சீட் வாங்கியுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினி. தற்போது லால் சலாம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்று வரும் நிலையில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் செல்வராகவனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.