உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்த ரஜினி!

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்த ரஜினி!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னை பாரிமுனையில் அமைச்சர் சேகர்பாபு, மு.க. ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , நடிகர் யோகி பாபு உள்பட பலர் உடன் இருந்தார்கள்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‛‛முதல்வர் ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான். படிப்படியாக உயர்ந்து தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். இது மக்கள் அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம் ஆகும். அவர் நீண்டநாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !