மீண்டும் நீச்சல் உடையில் அமலாபால் அதகளம்
ADDED : 977 days ago
தமிழில் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்துள்ள அமலபால், ஹிந்தியில் அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வரும் போலா என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வெளியான கைதி படத்தின் ரீமேக் ஆகும். மேலும், தனது சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலாபால், சமீபத்தில் ஒரு காட்டுப் பகுதியில் நீர் வீழ்ச்சியில் நீச்சல் உடை அணிந்து நீராடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தன. இந்த நிலைகள் மீண்டும் தான் பிகினி உடையில் கடற்கரையில் துள்ளி குதித்து மகிழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியாக உள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.