புடவையில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி : வைரலாகும் க்யூட் கிளிக்ஸ்
ADDED : 935 days ago
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி கலந்து கொண்டு பிரபலமானார். அவரது குழந்தைத்தனமான செயல்களும், இலங்கை தமிழ் பேச்சும் தமிழக இளைஞர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸை விட்டு வெளியே வந்த பிறகு சில படங்களில் ஜனனி கமிட்டாகி நடித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் மாடலாகவும் விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு தமிழக இளைஞர்களின் க்ரஷ்ஷாகவும் மாறிவிட்டார். அந்த வரிசையில் பட்டுபுடவை, நகைகளுடன் மணப்பெண் கோலத்தில் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடமிருந்து ஜனனிக்கும் லவ் புரொபோஸல்களும் குவிக்கின்றன.