ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‛சொர்க்கவாசல்' படத்தில் இணைந்த செல்வராகவன்!
ADDED : 975 days ago
சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவன் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் சொர்க்கவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார். வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் என ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது சொர்க்கவாசல் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனும் இணைந்து இருக்கிறார். அதோடு பகாசூரன் படத்தில் நடித்தது போன்று இந்த படத்திலும் செல்வராகவன் ஒரு அழுத்தமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.