பத்து தல படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்
ADDED : 1080 days ago
இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் சிம்பு கேரியரில் அதிக விலைக்கு வாங்கியுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது.இப்படம் வரும் மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.