உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் டுடே ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மற்றும் போனி கபூர் வாரிசுகள்

லவ் டுடே ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மற்றும் போனி கபூர் வாரிசுகள்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் 'லவ் டுடே'. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர்.
இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணி நடக்கிறது. ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அமீர்கான் மகன் ஜூனைத் கான் மற்றும் இந்த படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் போனி கபூர் மகள் குஷி கபூர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !