கரகாட்டக்காரன்- 2 படத்தை இயக்கும் வெங்கட் பிரபு!
ADDED : 966 days ago
1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படம் அப்போது தியேட்டர்களில் ஓராண்டுக்கு மேலாக ஓடி சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் ராமராஜன் நடித்த வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார். அதோடு முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோரும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். அதோடு கரகாட்டக்காரன் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த நிலையில் தற்போது அவரது மகனான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.