கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு
ADDED : 969 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு போர்க்களக் காட்சி ஒன்றில் தனுஷ் நடித்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அந்த வீடியோக்களை தற்போது சோசியல் மீடியாவில் இருந்து நீக்கி வருகிறார்கள். அதோடு இதன்பிறகும் இதுபோன்று யாரேனும் படப்பிடிப்பு காட்சிகளை படமாக்கி வெளியிட்டு விடக்கூடாது என்பதற்காக பலத்த செக்யூரிட்டி போடப்பட்டுள்ளது.