உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவினுக்கு பதிலாக அஸ்வின்?

கவினுக்கு பதிலாக அஸ்வின்?

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தன் ரெளடி பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பதாக அறிவித்த படம் ஊர் குருவி. இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கிறார் என அறிவித்தனர். புதுமுக இயக்குனர் அருண் இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்தை விட்டு ஒரு சில காரணங்களால் கவின் விலகியுள்ளார். அவர் விலகியதை தொடர்ந்து தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனும் விலகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதில் கதாநாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !