மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
892 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
892 days ago
கவுதம் கார்த்திக் நடித்துள்ள 1947 ஆகஸ்ட் 16 படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது “ ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் தான் ஸ்கிரிப்ட் பணிகளை செய்தேன். அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். இதையடுத்து அவர் தயாரித்த 'மான் கராத்தே' படத்தில் கதாநாயகனாக நடித்தேன். இன்று அவரது '1947 ஆகஸ்ட் 16' படத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அடுத்த கட்டம் உள்ளது அது விரைவில் நடக்கும் என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் எனும் செய்தி சமூக வளைதளங்களில் பரவி வந்தது. அந்த படத்தை பற்றி தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது அவரது பேச்சிலும், விழாவில் கலந்து கொண்டதிலும் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தாகூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
892 days ago
892 days ago