டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி'
ADDED : 968 days ago
அஜித் நாயகனாக அறிமுகமாக, 1993ல் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளியான படம் 'அமராவதி'. செல்வா இயக்க, நாயகியாக சங்கவி நடித்திருந்தார். படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் மே முதல் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அமராவதி படம் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வெளியாகிறது.
சோழா பொன்னுரங்கம் கூறுகையில், 'அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜித் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் மே மாதம் முதல் தேதி, அஜித்குமார் பிறந்தநாளில், அவரின் முதல் படமான 'அமராவதி' படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம்,'' என்றார்.