மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
892 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
892 days ago
சிம்பு, கவுதம் கார்த்தி இணைந்து நடித்துள்ள 'பத்து தல' படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை கிருஷ்ணா இயக்கி உள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி கவுதம் கார்த்தி கூறியிருப்பதாவது: ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. 'பத்து தல' திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு கொரோனா காலக்கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம்.
சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் 'பத்து தல' திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவர் அதைச் செய்தார். அவர் என்ன செய்கிறார் என்பதற்கான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது.
இவ்வாறு கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
892 days ago
892 days ago