நடிகை ரேவதியா இது
ADDED : 917 days ago
80 காலகட்டத்தில் முண்ணனி கதாநாயகியாக மற்றும் அந்த காலகட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. அதன்பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இப்போது வரை இவர் தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அவ்வப்போது படங்களும் இயக்குகிறார்.
சமீபத்தில் டூத் பாரி என்ற இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் ரேவதி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில், இவரது தோற்றம் வித்தியாசமாக இருப்பதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பார்ப்பதற்கு ஏதோ மந்திரவாதி பெண் போன்று அவரின் தலைமுடி, தோற்றம் உள்ளது. தற்போது ரேவதியின் புதிய தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.