உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பௌர்ணமி, பங்குனி உத்திரம் : 6 படங்களின் டிரைலர் வெளியீடு

பௌர்ணமி, பங்குனி உத்திரம் : 6 படங்களின் டிரைலர் வெளியீடு

பௌர்ணமி, பங்குனி உத்திரம் என நேற்றைய நாள் மிகவும் விசேஷமான நாளாக இருந்ததால் சில படங்களின் டிரைலர்கள் வெளியாகின. அருண் விஜய், எமி ஜாக்சன் நடிக்கும் 'மிஷன்' , மற்றும் சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' பட டிரைலர், யோகிபாபு நடிக்கும் 'யானை முகத்தோன்' டிரைலர், கதி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி நடிக்கும் 'யாத்திசை' டிரைலர், சமந்தா நடிக்கும் 'சாகுந்தலம்' படத்தின் இரண்டாவது டிரைலர் ஆகியவையும் வெளியாகி உள்ளன.

மேலும், 'புஷ்பா 2' படத்தின் 'புஷ்பா எங்கே' என்ற முன்னோட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !