கேபிஒய் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் பரிசளித்த லாரன்ஸ்
ADDED : 913 days ago
இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். இதை தயாரித்து, இயக்கியுள்ளார் கதிரேசன். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். விஜய் டிவி KPY பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதை அறிந்த ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு சுமார் ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.