விடுதலை படத்தை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்!
ADDED : 946 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை' . கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை ரஜினிகாந்த் உட்பட பல திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை திரைப்படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் படக்குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் 'பொல்லாதவன்' திரைப்படத்தில் இருந்தே வெற்றிமாறனோட மிகப்பெரிய ரசிகன். எப்போதும் போல் நன்றாக படத்தை எடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.