உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாருக்கான் - சல்மான்கான் இணைந்து நடிக்கிறார்களா?

ஷாருக்கான் - சல்மான்கான் இணைந்து நடிக்கிறார்களா?

நடிகர் ஷாருக்கான், நடிகர் சல்மான்கான் இருவரும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள். சமீபத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த படம் பதான். இந்த படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது இந்தப்படம். இந்நிலையில் சல்மான் கான், ஷாருக் கான் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு டைகர் vs பதான் என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வார், பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !