தனுஷை என் மகன் என வழக்கு தொடர்ந்தவர் மருத்துவமனையில் அனுமதி : மரபணுவை பாதுகாக்க கோரிக்கை
ADDED : 1066 days ago
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலூர் கோர்ட்டிலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தற்போது தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று புதிய வழக்கு தொடரப்பட்டு, அது நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவருக்கு முதுமை காரணமாக அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்பதால் கதிரேசன் மனைவி மீனாட்சி தனது கணவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துமனை டீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.