மீண்டும் நயன்தாராவுடன் இணையும் ராஷி கண்ணா
ADDED : 908 days ago
தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கும் படம் ‛டெஸ்ட்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. இதில் மாதவன், சித்தார்த் , நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் மாதவனும், நயன்தாராவும் முதன்முறையாக இப்போது தான் ஜோடி சேருகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தவர். இந்த படத்தில் அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடிப்பதாக கூறப்படுகிறது.