உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிக்க வருவதற்கு முன் ஆல்யா மானசா என்ன வேலை செய்தார் தெரியுமா?

நடிக்க வருவதற்கு முன் ஆல்யா மானசா என்ன வேலை செய்தார் தெரியுமா?

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் ஆல்யா மானசா. தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். டாப் ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆல்யாவுக்கு கேட்கும் சம்பளத்தை கொடுக்க முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் ரெடியாக உள்ளனர். ஆனால், நடிக்க வருவதற்கு முன் ஆல்யா சாதாரண சேல்ஸ் பெண்ணாக மாதசம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார்.

12வது படித்து முடித்தவுடன் யமஹா ஷோரூமுக்கு வேலைக்கு சென்ற ஆல்யா மாதம் வெறும் 5000 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றதாக அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால், இன்றைய நாளில் ஆல்யா நான் ஒன்றுக்கே 5000 ரூபாய் செலவழிக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !