50வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி
ADDED : 1168 days ago
சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நிதிலன் இயக்கி வருகிறார். பழிவாங்கும் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், விஜய் சேதுபதி இன்னும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க வேண்டிய உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால் இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து கதை மற்றும் கதாபாத்திரம் இரண்டுமே வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனர் நிதிலன் தெரிவித்திருக்கிறார்.