எப்.ஐ.ஆர் இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஆர்யா
ADDED : 1170 days ago
எனிமி, கேப்டன் படங்களில் நடித்த ஆர்யா, தற்போது முத்தையா இயக்கும் ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தி இத்னானி நாயகியாக நடிக்கும் இந்த படம் ஜூலை 31ந்தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டதால், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதன் பிறகு சார்பட்டா பரம்பரை- 2 படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.