மருத்துவமனையில் ஜி.பி.முத்து! பதறிய ரசிகர்கள்
ADDED : 922 days ago
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மக்களின் மனதில் இடம்பிடித்தார். சின்னத்திரை, சினிமா என பிசியாக வலம் வரும் ஜி.பி.முத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4-லும் காமெடியில் கலக்கி வருகிறார். ஜி.பி.முத்துவிற்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் பலரும் பதட்டத்துடன் 'தலைவருக்கு என்ன ஆச்சு?' என நலம் விசாரித்து வருகின்றனர்.