மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
873 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
873 days ago
காதல் படத்தில் நடித்த சுகுமார், நடிகர் சந்தானம், ‛வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் நீண்டகால நண்பர்கள். இந்த நிலையில் சுகுமார், நடிகர் சந்தானத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டதாவது: சந்தானத்திடம் ஆறு மாதங்களுக்கு முன் கதையின் ஒன்லைன் சொன்னதற்கு ‛சூப்பர் மச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு சொல்லு' என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்பு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு கால் பண்ணியபோது ‛வடக்குப்பட்டி ராமசாமி' படப்பிடிப்பில் இருக்கிறேன் எனக்கூறினான். அப்படியே ஒரு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தேன்.
கதையை கேட்டதும் ‛நிச்சயமா நாம பண்றோம்' என்றான் சந்தானம். எனது இணை தயாரிப்பாளரிடம் சந்தானம், ‛கதை வேற லெவல்ல இருக்கு. இப்போ நான் இவனுக்கு பண்றது என் கடமை, அவன் இன்னும் நல்லா வரணும். அவன் நினைச்ச மாதிரி படம் வந்தா நாம எல்லாருமே நல்லாருப்போம்' என சொன்னதும் நான் நெகிழ்ச்சியில் கலங்கிப் போனேன். விரைவில் இறை நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளோடு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
873 days ago
873 days ago