நானியின் 30வது படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!
ADDED : 1131 days ago
நடிகர் நானி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தசரா. இந்த படம் முதல் முறையாக நானிக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை பெற்றுத்தந்துள்ளது. இப்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நானி தனது 30வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிர்தியம் இசையமைப்பாளர் ஏசம் அப்துல் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.