உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த 'ஆர்ஆர்ஆர்' பார்ட்டியிலும் ஆப்சென்ட் ஆன தயாரிப்பாளர்

அடுத்த 'ஆர்ஆர்ஆர்' பார்ட்டியிலும் ஆப்சென்ட் ஆன தயாரிப்பாளர்

ஆஸ்கர் விருது வாங்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தயாரிப்பாளரான டிவிவி. தனய்யா விருதுக்கு முன்பும் பின்பும் அந்தப் படத்திற்கான எந்த ஒரு நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் அழைப்பு விடுக்கவில்லையா, அல்லது அவராகக் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போகிறாரா என்பது தெரியாமல் உள்ளது.

'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஒளிப்பதிவாரான செந்தில்குமார், 'ஆர்ஆர்ஆர்' குழுவினருக்கு ஒரு பெரும் பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் ராஜமௌலி, ராம்சரண், ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் சில தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜுனியர் என்டிஆர் அவரது 30வது படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான டிவிவி.தனய்யா கலந்து கொள்ளாதது வழக்கம் போல ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளரான ஷோபு எர்லகட்டா கலந்து கொண்ட நிலையில் 'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர் ஏன் வரவில்லை என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !