தனுஷின் 50வது படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம்?
ADDED : 904 days ago
கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அதன் பிறகு தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ். ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோருடன் தனுசும் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனுஷின் இந்த ஐம்பதாவது படம் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே புதுப்பேட்டை படத்தில் தான் நடித்த கொக்கி குமார் கேரக்டரை மீண்டும் தனுஷ் தொடருவதாகவும், இந்த படத்திற்கு கொக்கி குமார் என்றே டைட்டில் வைக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய வை ராஜா வை என்ற படத்தில் ஒரு ஐந்து நிமிடம் கொக்கி குமார் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.