மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
867 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
867 days ago
நடிகர் தனுஷ் அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த திருடா திருடி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாயா சிங். அந்த படத்தில் இருவரும் இணைந்து அதிரடி நடனம் ஆடிய மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து தமிழ், கன்னடம் என மாறிமாறி நடித்து வந்த சாயா சிங், கடந்த சில வருடங்களில் பவர் பாண்டி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆக்சன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பி கன்னடம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சீரியல்களில் நடித்து வருகிறார் சாயா சிங்.
கன்னடத்தில் அம்ருதாதரே என்கிற சீரியலில் குடும்பத்திற்காக பாடுபடுகின்ற, குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துகின்ற, தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக நடித்து வருகிறார். அதேசமயம் தெலுங்கில் அனு ஆனே நானு என்கிற சீரியலில் முற்றிலும் மாறாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் சாயா சிங்.
இந்த இரண்டு சீரியல்களின் படப்பிடிப்பம் ஒரேசமயத்தில் நடைபெறுவதால் ஒன்றில் பாசிட்டிவ் ஆகவும் மற்றொன்றில் நெகட்டிவ் ஆகவும் மாறி மாறி வசனங்களை பேசி நடிப்பதால் மனதளவில் நான் தயாராக வேண்டி உள்ளது. இதுஒருவிதமான மன அழுத்தத்தை தருகிறது'' என்றார்.
867 days ago
867 days ago