அனகோண்டா வாரம்: 5 படங்கள் ஒளிபரப்பு
ADDED : 976 days ago
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் தொலைக்காட்சி சேனல்கள் குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்தும் படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலர்ஸ் தமிழ் சேனல் இந்த வாரத்தை அனகேண்டா வாரமாக அறிவித்து 5 அனகோண்டா படங்களை வெளியிடுகிறது.
இன்று 'லேக்பிளாசிட் வெசஸ் அனகோண்டா' படத்தை ஒளிபரப்பியது. இதேப்போன்று தினமும் காலை 8.30 மணிக்கு வருகிற வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்புகிறது, நாளை 'அனகோண்டா' படத்தையும், நாளை மறுநாள் 'அனகோண்டா தி ஹண்ட் பார் தி பிளட் ஆர்சிட்' படத்தையும், 27ம் தேதி 'அனகோண்டா 3' படத்தையும், 28ம் தேதி 'அனகோண்டா டிரைல் ஆப் பிளட்' படத்தையும் ஒளிபரப்புகிறது.