மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
864 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
864 days ago
டிக் டாக் பிரபலமான ஜி.பி.முத்துவின் காமெடிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரீலில் காமெடியனாக இருந்தாலும் நிஜத்தில் ஜி.பி. முத்து ஒரு சென்டிமென்ட் புலி. தன்னை சுற்றியிருப்பவர்களை அன்பாக அரவணைத்து எப்போதும் சந்தோஷமாக வைக்க முயற்சிப்பார். மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என அனைவரையும் சுற்றுலாவுக்கு கூட்டி செல்வது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது என பார்த்து பார்த்து செய்வார்.
பிக்பாஸ் வீட்டில் கூட அவரது இந்த குணத்தினால் தான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றார். அவர் தற்போது தனது தந்தைக்காக புதிதாக பைக் வாங்கி பரிசளித்துள்ளார். அதன் புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ஜி.பி.முத்து தற்போது சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சில திரைப்படங்களிலும் கமிட்டாகி பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
864 days ago
864 days ago