மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
864 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
864 days ago
சென்னையை அடுத்த பையனூரில் அரசின் சார்பில் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஸ்டுடியோக்கள், டப்பிங், ரிக்கார்டிங் தியேட்டர்கள், திரைப்பட அரங்கங்கள், தொழிலாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணைப்பு சாலை அமைக்க திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அரசிடம் 35 லட்சம் கொடுத்தது.
இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பையனூரில் நாம் புதிதாக கட்டி வரும் திரைப்பட அரங்கிற்கு அருகே சாலை அமைக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. சாலை மதிப்பு ஒரு கோடியே ஐந்து லட்சம் அதில் மூன்றில் ஒரு பங்கை நம் சம்மேளனத்தில் மூலம் செலுத்தினால் அந்த சாலைத் திட்டத்திற்கு முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்த முடியும் என்று ஆட்சியாளர் கூறியதை ஏற்று சம்மேளனத்தின் பங்காக 35 லட்ச ரூபாயை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் ராகுல்நாத்திடம் சம்மேளனத் தலைவர் ஆர்கே. செல்வமணி, துணைத் தலைவர் தீனா வழங்கினார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
864 days ago
864 days ago