சிரஞ்சீவி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி: ராம்சரண் மனைவிக்கு வளைகாப்பு
ADDED : 895 days ago
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா ஆகப்போகிறார் ராம்சரண். இதனால் சிரஞ்சீவி குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. ராம்சரண் மனைவி உபாசானாவின் வளைகாப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் ருமதி சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வளைகாப்பு புகைப்படங்கள் ஆந்திரா, தெலுங்கானா பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.