எஸ். எம். எஸ் 2-விற்கு தயாராகும் ஜீவா!
ADDED : 908 days ago
நடிகர் ஜீவா ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். ஆனால், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. தற்போது வெற்றி பாதைக்கு திரும்ப கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது கேரியரில் முக்கிய படம் சிவா மனசுல சக்தி. இயக்குனர் எம். ராஜேஷின் முதல் படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இப்போது ஜீவாவும், ராஜேஷும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எம்.ராஜேஷ் தற்போது நடிகர் ஜெயம் ரவி, நடிகை பிரியங்கா மோகனை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும். இப்படத்தை ஜீவா தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.