ஏ.வி.எம் சரவணனை சந்தித்த ரஜினி
ADDED : 912 days ago
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஜெயிலர். நேற்று இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அறிவித்தனர். இதை தொடர்ந்து மும்பையில் துவங்கும் லால் சலாம் படப்பிடிப்பில் விரைவில் இணைய உள்ளார் ரஜினி.
மும்பை செல்வதற்கு முன் ரஜினி இன்று(மே 5) ஏ.வி.எம் நிறுவன தயாரிப்பாளர் சரவணன் அவர்களை சந்தித்துள்ளார். அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ரஜினி நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் இயக்குனர் எஸ். பி. முத்துராமனும் சென்றிருந்தார். இப்போது இந்த புகைப்படத்தை சரவணனின் பேத்தி அருணா குகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.