மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
849 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
849 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
849 days ago
தமிழில் கடந்த 2021ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கி நடித்து ஜீ5 ஒட்டி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். தம்பி ராமையா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக அறிவித்திருந்தனர்.
தெலுங்கில் சமுத்திரக்கனி இப்படத்தை இயக்குகிறார். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'BRO' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் பவன் கல்யாணை BRO என்று தான் சாய் தரம் தேஜ் அழைப்பாராம் அதனால் தான் இந்த தலைப்பு என்று கூறுகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
849 days ago
849 days ago
849 days ago