கஸ்டடி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
ADDED : 925 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் கஸ்டடி . நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கிரித்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தவாரம் மே 12 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. ஆக் ஷனும், எமோஷனும் கலந்த படமாக உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக U/A சான்றிதழ் சென்சார் குழுவினர் அளித்துள்ளனர். இந்த படம் 2 மணி நேர 28 நிமிடம் நேரம் ஓடும் என்று கூறப்படுகிறது.