ஆசீர்வதிக்கப் பட்டவளாக உணர்கிறேன் : கிர்த்தி சனோன்
ADDED : 883 days ago
ராமாயணத்தை தழுவி ஓம் ராவத் இயக்கி உள்ள படம் ‛ஆதி புருஷ்'. ராமராக பிரபாஸ், சீதாவா கிர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பட டிரைலர் விழாவில் பேசிய சீதையாக நடித்துள்ள கிர்த்தி சனோன், ‛‛ராமரை போன்று எளிமையான மனிதர் பிரபாஸ். மனதில் தோன்றியதை நேரடியாக பேசுபவர். சீதையாக என்னை இந்தப்படத்தில் நடிக்க தேர்வு செய்ததற்கு நன்றி. சிலருக்கு மட்டும் தான் வாழ்நாளில் இப்படி ஒரு வேடம் அமையும். அந்தவகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்'' என்றார்.