தெலுங்கில் அறிமுகமாகும் திவ்ய பாரதி!
ADDED : 886 days ago
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக நடிகை திவ்ய பாரதி அறிமுகமானவர். தற்போது மதி மேல் காதல் படத்தில் முகின் ராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் திவ்ய பாரதி. பாகல் திரைப்படத்தின் இயக்குனர் நரேஷ் லீ அடுத்து நடிகர் சுதிர் ஆனந்தின் 4வது படத்தை இயக்குகிறார். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.