உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறைந்த நடிகர் ஜே.கே. ரித்தீஷின் மனைவிக்கு ஆறு மாதம் சிறை

மறைந்த நடிகர் ஜே.கே. ரித்தீஷின் மனைவிக்கு ஆறு மாதம் சிறை

நாயகன், கானல் நீர், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் தனது 46 வயதிலேயே மரணம் அடைந்தார் ஜே.கே. ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்பவர் காரைக்குடியில் நகை தொழில் வியாபாரம் செய்து வரும் திருச்செல்வம் என்பவரிடத்தில் 60 லட்சம் ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை வாங்கி இருக்கிறார். அதற்கான பணத்தை கொடுக்காமல் இருபது லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன் பிறகும் சொன்னபடி அந்த பணத்தை அவர் தராததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதீஸ்வரிக்கு ரூபாய் 60 லட்சம் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !